Saturday, 21 April 2012

பொருலாதார சிக்கலில் இருந்து விடுபட.....


நன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். ௭னது கட்டுரையில் சிரிது இடைவேலை சிரமத்திற்கு மண்னிக்கவும். இந்த வலைபுவில் குறிப்பிடும் அனைத்து விவறங்கள் ௭னது அனுபவபூர்வமாக ௨ணர்ந்தவை. யாம் பெற்ற இன்பம் இந்த வையகம் பெறவேண்டும் ௭ன்ற நல்லெண்னமுடன் ௨ங்கலுடன் பகிந்துகொள்கிறேன்.

கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி நாம் அனைவரும் வைக்கும் முதல் கோரிக்கை இறைவா ௭ன்னை பொருலாதார சிக்கலில் இருந்து விடுவி ௭ன்று. ௨ங்களது பொருலாதார சிக்கலில் இருந்து விடுபட ஓர் ௭ளிய இறைவழிபாடு.

ஸ்ரீமத்  பாம்பன் சுவாமிகள் அருளிய தங்க ஆனந்த களிப்பு & வேற்குழவி வேட்கை
Click the image below to see big.



தங்க ஆனந்தக் களிப்பை உள்ளன்போடு பாராயணம் செய்வோர் இல்லத்தில் பொன் வரவு அதிகமாகுதல்,செல்வ யோகங்கள் பெருகுதல் பலிதமாகின்றன. வேற்குழவி வேட்கை பாராயணம் புத்திர தோஷத்தை நீக்கி, சந்ததி விருத்தியும்,குடும்ப பாரம்பரியத்தைக் காக்கும் திறனுள்ள நல்ல குழந்தைகளை உருவாக்கும். உங்கள் நலம் விரும்பிகள். அனைவருக்கும் இதை தெரியப்படுத்துங்கள்.
இது அணுபவபூர்வமாக ௨ணர்ந்த ௨ண்மை..
அண்ணாமலை அருள் உங்களுக்கு பூரணமாக கிடைக்க ஆசிகள்.
நன்றி livingextra.com
for more information www.livingextra.com


Monday, 9 April 2012

அசைவம் ஏன் சாப்பிடக்கூடாது?



அசைவம் சாப்பிடுவதால்,முதலில் மந்த குணம் உண்டாகிறது.சாத்வீக குணம் போய்விடுகிறது.அடுத்தபடியாக மனதில் மிருக உணர்ச்சி உண்டாகிறது.இந்த மிருக உணர்ச்சி எதற்கெடுத்தாலும் போராடும் குணத்தையும்,எதற்காகவும் சமரசமாகும் மனோபாவத்தையும் அழித்துவிடுகிறது.காம இச்சையும் மிருகத்தனமாக உருவாகிறது.மென்மையான மனித உணர்வுகள் அழியத்துவங்குகின்றன அல்லது நம்மை விட்டு நீங்கத் துவங்குகின்றன.

என்றைக்கு நாம் அசைவம் சாப்பிடுகிறோமோ,அன்று வரையிலும் நாம் செய்துவந்த வழிபாடுகள்,பிரார்த்தனைகள்,மந்திர ஜபங்கள்,தானங்களின் பலன்கள் நம்மைத் தேடி புண்ணியமாகவும்,நல்ல தொழில் மற்றும் வேலை வாய்ப்புக்களாகவும் வந்துகொண்டிருக்கும்.அப்படி வருபவை நின்றுவிடும்.தவிர, நாம் செய்த புண்ணியத்தின் பலன்கள் நமக்குக் கிடைக்காமல் போகலாம்.அல்லது மிகவும் தாமதமாகக் கிடைக்கலாம்.

செயற்கையாக உருவாக்கப்படும் முட்டை சைவம் தானே என வாதம் செய்கிறார்கள்.செயற்கை முட்டையும் அசைவம் தான்.புரோட்டா மாவு பிசையும்போதே அதில் முட்டையின் கருவை கலந்துவிடுகிறார்கள்.ஆக,புரோட்டாவும் அசைவம் தான்.என்ன செய்வது?
நிம்மதியாக வாழ வேண்டுமெனில்,தினமும் ஒரு முறை மட்டுமாவது கால் மணிநேரம் வரையிலாவது ஓம்சிவசிவஓம் ஜபிப்பது அவசியம்.இப்படி ஜபிப்பதற்கு அசைவத்தை கைவிட்டே ஆக வேண்டும்.

குறைந்த பட்சம் 180 நாட்கள் வரையிலாவது அசைவத்தை தவிர்ப்போம்.ஒரு நாளுக்கு 15 நிமிடங்கள் வீதம் 180 நாட்கள் விடாமல் ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தால்,நமது ஜப எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி விடும்.என்றைக்கு ஒரு லட்சத்தை நமது ஓம்சிவசிவஓம் தாண்டுகிறாதோ,அன்று முதல் நமது கஷ்டங்கள்,துயரங்கள்,அவமானங்கள்,தீரவே தீராது என நம்பி சகித்துக்கொண்டிருந்த பிரச்னைகள் தீர்ந்துவிடும்.

அதன் பிறகு,என்றைக்காவது ஒரு நாள்,அதுவும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டும் அசைவம் சேர்த்துக்கொள்ளலாம்.அன்று மட்டும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க முடியாது.(ஒரு நாள் சீனியாரிட்டி புண்ணியம் கிடைப்பதிலிருந்து நாம் பின் தங்க வேண்டியது தான்)

 நன்றி ஆன்மீகக்கடல்

Sunday, 8 April 2012

ருத்ராட்சம் அணிவதில் இருக்கும் சந்தேகங்கள்


ருத்ராட்சத்தை வாங்கும் மனிதர்கள் யாராக இருந்தாலும், அதை கட்டாயம் அணிந்துகொள்ள வேண்டும்; அணிந்தப்பின்னர், அதை ஒரு போதும் கழற்றக்கூடாது.அப்படிக் கழற்றினால் அது பாவத்தைத் தரும்.



சரி! ருத்ராட்சம் அணிந்துகொண்டு காம ரீதியான நடவடிக்கையில் ஈடுபடலாமா?அப்படி ஈடுபட்டால் அது பாவம் கிடையாதா?

நிச்சயமாகக் கிடையாது.மனிதனது வழக்கமான நடவடிக்கைகளில் ஒரு பகுதியே காம நடவடிக்கைகளும்(உடலுறவு கொள்ளுவதும்,சுய இன்பம் அனுபவிப்பதும்).காமமே தவறு எனில்,கடவுள் நம்மையெல்லாம் படைத்ததே தவறுதானே? ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடுவது மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. ஆண்கள் தொண்டைக்குழியில் ருத்ராட்சம் இருப்பதுபோல், கழுத்தில் ருத்ராட்சம் கட்டுவது நல்லது. இதனால், ஆண்களின் ஆண்மை சக்தி அதிகரிக்கும்; ஆண்மைக்குறைவு குறைந்து விந்து கெட்டிப்படுதல் அதிகரிக்கும்;நினைவாற்றல் அதிகரிக்கும்.

பிறந்த குழந்தை முதல் 100 வயது பாட்டி வரை யார் வேண்டுமானாலும், எவர் வேண்டுமானாலும் ருத்ராட்சம் அணியலாம்.கர்ப்பிணிகள், உடல் ஊனமுற்றோர்கள், நோயாளிகள்,மன நிலை பாதித்தவர்கள் என யாரும் ருத்ராட்சம் அணியலாம்.
நீங்கள் உங்களது தினசரி வாழ்க்கையுடன் சேர்ந்தே புண்ணியம் சேர்க்க விருப்பமா?
உங்களது வார்த்தையை மதிக்கும் 21 வயதுக்கு மேற்பட்டவர்களிடம்,சந்தர்ப்ப சூழ்நிலை பார்த்து,ஓம்சிவசிவஓம் பற்றி விளக்கிச் சொல்லுங்கள்.அவர்களையும் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க தூண்டுங்கள்.
அவர்களுக்கும் ருத்ராட்சம் வாங்கித் தாருங்கள். வாங்கித் தருவது முக்கியமல்ல; அவர்கள் எக்காரணம் கொண்டும் அணிந்த ருத்ராட்சத்தைக் கழற்றக்கூடாது.  இது ரொம்ப முக்கியம்.  உங்கள் ஊரில் இருக்கும் காதி பவன்களில்/துறவிகள் வாழும்  ஆசிரமங்களில்/மகான்களிடம் வாங்குங்கள்.

Thank's Aanmigakadal Arakattalai.
ஓம்சிவசிவஓம்