அசைவம் சாப்பிடுவதால்,முதலில் மந்த குணம் உண்டாகிறது.சாத்வீக குணம்
போய்விடுகிறது.அடுத்தபடியாக மனதில் மிருக உணர்ச்சி உண்டாகிறது.இந்த மிருக உணர்ச்சி
எதற்கெடுத்தாலும் போராடும் குணத்தையும்,எதற்காகவும்
சமரசமாகும் மனோபாவத்தையும் அழித்துவிடுகிறது.காம இச்சையும் மிருகத்தனமாக உருவாகிறது.மென்மையான
மனித உணர்வுகள் அழியத்துவங்குகின்றன அல்லது நம்மை விட்டு நீங்கத் துவங்குகின்றன.
என்றைக்கு நாம்
அசைவம் சாப்பிடுகிறோமோ,அன்று வரையிலும்
நாம் செய்துவந்த வழிபாடுகள்,பிரார்த்தனைகள்,மந்திர ஜபங்கள்,தானங்களின் பலன்கள் நம்மைத் தேடி புண்ணியமாகவும்,நல்ல தொழில் மற்றும் வேலை வாய்ப்புக்களாகவும்
வந்துகொண்டிருக்கும்.அப்படி வருபவை நின்றுவிடும்.தவிர, நாம் செய்த புண்ணியத்தின் பலன்கள் நமக்குக் கிடைக்காமல்
போகலாம்.அல்லது மிகவும் தாமதமாகக் கிடைக்கலாம்.
செயற்கையாக
உருவாக்கப்படும் முட்டை சைவம் தானே என வாதம் செய்கிறார்கள்.செயற்கை முட்டையும் அசைவம்
தான்.புரோட்டா மாவு பிசையும்போதே அதில் முட்டையின் கருவை கலந்துவிடுகிறார்கள்.ஆக,புரோட்டாவும் அசைவம் தான்.என்ன செய்வது?
நிம்மதியாக
வாழ வேண்டுமெனில்,தினமும் ஒரு
முறை மட்டுமாவது கால் மணிநேரம் வரையிலாவது ஓம்சிவசிவஓம் ஜபிப்பது அவசியம்.இப்படி ஜபிப்பதற்கு
அசைவத்தை கைவிட்டே ஆக வேண்டும்.
குறைந்த பட்சம்
180 நாட்கள் வரையிலாவது அசைவத்தை தவிர்ப்போம்.ஒரு
நாளுக்கு 15 நிமிடங்கள்
வீதம் 180 நாட்கள் விடாமல் ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தால்,நமது ஜப எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி விடும்.என்றைக்கு
ஒரு லட்சத்தை நமது ஓம்சிவசிவஓம் தாண்டுகிறாதோ,அன்று
முதல் நமது கஷ்டங்கள்,துயரங்கள்,அவமானங்கள்,தீரவே
தீராது என நம்பி சகித்துக்கொண்டிருந்த பிரச்னைகள் தீர்ந்துவிடும்.
அதன் பிறகு,என்றைக்காவது ஒரு நாள்,அதுவும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டும்
அசைவம் சேர்த்துக்கொள்ளலாம்.அன்று மட்டும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க முடியாது.(ஒரு நாள்
சீனியாரிட்டி புண்ணியம் கிடைப்பதிலிருந்து நாம் பின் தங்க வேண்டியது தான்)
நன்றி
ஆன்மீகக்கடல்
No comments:
Post a Comment